/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 சாலை விபத்தில் 4 வாலிபர்கள் பலி
/
2 சாலை விபத்தில் 4 வாலிபர்கள் பலி
ADDED : ஜூலை 29, 2025 01:47 AM
கதக்: வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், நால்வர் உயிரிழந்தனர்.
கதக் நகரின், சென்னம்மா சதுக்கத்தில் நேற்று காலை பைக் ஒன்று, சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த பைக், மின் கம்பத்தில் மோதியது. அதில் பயணம் செய்த அமன் ரியாஜ், 25, ஜுனேத், 23, ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால், அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த கதக் போக்குவரத்து போலீசார், விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். போக்குவரத்தை சரி செய்தனர்.
பஸ் மோதல் கோலார் மாவட்டம், தங்கவயல் தாலுகாவின், கொல்லஹள்ளி கிராமத்தில் வசித்தவர்கள் அபிஷேக் கவுடா, 30, சப்யா, 29. இவர்கள் கோழிப்பண்ணையில் பணியாற்றினர். இருவரும் தினமும் பணிக்கு சேர்ந்து செல்வது வழக்கம். அதேபோன்று நேற்று காலை, பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
கொல்லஹள்ளி அருகில் சென்றபோது, வேகமாக வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பேத்தமங்களா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.