sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் திடீர் ஆலோசனை

/

 சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் திடீர் ஆலோசனை

 சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் திடீர் ஆலோசனை

 சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் திடீர் ஆலோசனை


ADDED : பிப் 28, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 28, 2026 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர், பெங்களூரில் தனியார் ஹோட்டலில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் பதவியை தக்க வைக்க சித்தராமையாவும், தட்டி பறிக்க சிவகுமாரும் போராடி வருவதால், கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தன் ஆதரவு எம்.எல்.ஏ., - எம்.எல்.சி.,க்கள் 11 பேரை, கடந்த, 21 ம் தேதி சித்தராமையா வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பி வைத்தார். இதன் மூலம் தன் செல்வாக்கை பெருக்க முயற்சித்துள்ளார். இதனால், கடுப்பான சிவகுமார் தரப்பு, சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்து உள்ளது.

சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மாகடி பாலகிருஷ்ணாவுக்கு நேற்று பிறந்த நாள். தன் பிறந்தநாளை முன்னிட்டு, பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் சிவகுமார் ஆதரவாளர்களான அமைச்சர்கள் மங்கள் வைத்யா, டி.சுதாகர், எம்.எல்.ஏ.,க்கள் யோகேஸ்வர், பசவராஜ் சிவகங்கா, ரவிகுமார் கனிகா, நயனா மோட்டம்மா, உதய், சரத் பச்சேகவுடா உட்பட 40 பேருக்கு இரவு விருந்து வைத்தார். உணவு சாப்பிட்டு கொண்டே முதல்வர் பதவி விவகாரம் குறித்து ஆலோசித்தனர்.

பின், பாலகிருஷ்ணா கூறுகையில், ''நான் கொடுத்த விருந்தின் போது, அரசியல் பேசியது உண்மை தான். முதல்வர் பதவியால் நிலவும் குழப்பம் பற்றி பேசினோம். இதுபற்றி மேலிட கவனத்திற்கு கொண்டு செல்லவும் முடிவு எடுத்தோம். மேலிடம் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும். என்னால் தொகுதி பக்கமே செல்ல முடியவில்லை. மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். இதே நிலை நீடித்தால், அடுத்த தேர்தலில் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது கஷ்டம் தான்,'' என்றார்.






      Dinamalar
      Follow us