/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்லுாரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் பாதிப்பு
/
கல்லுாரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் பாதிப்பு
கல்லுாரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் பாதிப்பு
கல்லுாரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள் பாதிப்பு
ADDED : அக் 27, 2025 03:48 AM
பெலகாவி: பல்கலைக்கழக விடுதியில், மதிய உணவு சாப்பிட்ட 40 மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டனர். வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
பெலகாவி நகரின் கே.எல்.இ., பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு விடுதியிலேயே உணவு வழங்கப்படுகிறது.
நேற்று மதியம் வழக்கம் போன்று உணவு சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில், 40 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது.
அவர்களை விடுதி ஊழியர்கள், வெவ்வேறு மருத்துவமனைக ளில் சேர்த்தனர்.
இவர்களில் சில மாணவர்கள், சிகிச்சை பெற்று கொண்டு, வீடு திரும்பினர். 15 பேர் பிரபாகர் கோரே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் வரை கண்காணிப்பில் இருக்கும்படி, டாக்டர்கள் கூறியுள்ளனர். சில மாணவர்களுக்கு, விடுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்து சுகாதார அதிகாரிகள், மருத்துவமனைக்கு வந்து மாணவர்களிடம் நலம் விசாரித்தனர். அவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரியை, ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். அறிக்கை வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

