/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்றரை ஆண்டுகள் நடந்த விபத்துகளில் 41,884 பேர் பலி
/
மூன்றரை ஆண்டுகள் நடந்த விபத்துகளில் 41,884 பேர் பலி
மூன்றரை ஆண்டுகள் நடந்த விபத்துகளில் 41,884 பேர் பலி
மூன்றரை ஆண்டுகள் நடந்த விபத்துகளில் 41,884 பேர் பலி
ADDED : ஆக 22, 2025 11:16 PM
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 41,884 பேர் பலியானதாக, மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கை:
போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதது, ஓட்டுநர்களின் கவனக்குறைவு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட பல காரணங்களால் விபத்துகள் நடக்கின்றன.
இது போன்று மாநிலத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடந்த விபத்துகள் தொடர்பாக 1.93 லட்சம் வழக்குகள் பதிவாகின. இதில், 41,884 பேர் பலியாகி உள்ளனர்; 97,402 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
காரணம் மாநிலத்தில் 3.40 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1.24 கோடி வாகனங்கள் பெங்களூரு நகரில் மட்டுமே பதிவாகி உள்ளன. மக்கள்தொகை அதிகரித்து வருவதால், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றாற் போல, சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, விபத்து நடக்க முக்கிய காரணமாக உள்ளது.
கர்நாடகாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாவட்டத்தில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. துமகூரு, பெங்களூரு ரூரல், மாண்டியா, ஹாசன் ஆகியவை அடுத்த அடுத்த இடங்களில் உள்ள மாவட்டங்களாகும்.
நடவடிக்கை நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடந்துள்ளன. அதீத வேகம், கவனக்குறைவு ஆகியவை முக்கிய காரணமாக உள்ளன. இது போன்ற விபத்துகளை நெடுஞ்சாலைகளில் தடுக்க, வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள், வாகனங்கள் எவ்வளவு கி.மீ., வேகத்தில் செல்கின்றன என்பதை எல்.இ.டி., திரையில் காண்பிக்கின்றன.
அதிகபட்ச வேக வரம்பு 100 கி.மீ., ஆக குறைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விபத்துகள் அதிகம் நடக்கும் 942 இடங்களை மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. இதில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 214 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்துகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது.
சாலை சந்திப்புகளில் அடையாள பலகைகள், சூரிய ஒளி மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் கட்டப்பட்டன. குறிப்பிட்ட இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.