/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
5 நாள் ஆண் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை
/
5 நாள் ஆண் குழந்தை ரூ.5 லட்சத்துக்கு விற்பனை
ADDED : பிப் 08, 2026 05:27 AM
சீனிவாசப்பூர்: பிறந்து ஐந்து நாட்களான ஆண் குழந்தையை, 5 லட்சம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர், வாங்கிய தம்பதி, இடைத்தரகர் என, ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்தவர்கள் நீத்து, 28. ராகவேந்திரா 32.
இவர்கள், திருமணம் செய்து கொள்ளாமல், 'லிவிங் டுகெதர்' என்ற பாணியில் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள், நாராயணசாமி என்ற இடைத்தரகர் மூலம், தங்களின் ஐந்து நாள் ஆண் குழந்தையை சிந்தாமணியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றனர்.
இந்த விபரம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் போலீசாருக்கு தெரிய வந்தது. குழந்தையை விற்ற பெற்றோர், பணம் கொடுத்து வாங்கிய தம்பதி, இடைத்தரகர் ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை மீட்டனர். குழந்தையை விற்ற தாயிடம் சீனிவாசப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
குழந்தையின் தாய் நீத்து கூறுகையில், ''எங்களுக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர்.
பணப்பிரச்னை ஏற்பட்டதால், இடைத்தரகர் நாராயணசாமி மூலம், சிந்தாமணிநகரை சேர்ந்த தம்பதியிடம், 5 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு குழந்தையை விற்றோம்,'' என்றார். மேலும் விசார ணை நடந்து வருகிறது.
சீனிவாசப்பூர் போலீசார் விசாரிக்கின் றனர்.

