ADDED : மே 30, 2026 01:59 AM
அ நிறம் | அளவு
சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம், என்.ஆர்.புரா தாலுகாவின் கடவந்தி அருகில் வட்டிகுட்டா கிராமத்தில், காபி எஸ்டேட் உள்ளது. இரண்டு நாட்களாக, இந்த எஸ்டேட்டில் ஐந்து காட்டு யானைகள், குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. காபி செடிகளை மிதித்து துவம்சம் செய்கின்றன.
எஸ்டேட்டை சுற்றிலும் யானைகள் நடமாடுவதால், கூலித்தொழிலாளிகள், பணிக்கு செல்லவே அஞ்சுகின்றனர். சிறார்களையும் பள்ளிக்கு அனுப்புவதில்லை. வீட்டில் இருந்து வெளியே வரவே அனைவரும் தயங்குகின்றனர்.
