/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோவில்களில் உண்டியல் திருடிய 5 பேர் கைது
/
கோவில்களில் உண்டியல் திருடிய 5 பேர் கைது
ADDED : நவ 13, 2025 04:08 AM
பங்காருபேட்டை: பல்வேறு கிராமங்களில் உள்ள கோவில்களில் பூட்டுகளை உடைத்து உண்டியல்களை திருடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
நவம்பர் 8ம் தேதி பூதிக்கோட்டையில் இருந்து பங்காருபேட்டையை நோக்கி 3 பைக்குகளில் ஐந்து பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி, விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசினர்.
தீவிர விசாரணையில், அந்த கும்பலுக்கு கோவில் உண்டியல்கள் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லோகேஷ், 35, சோமா, 25, வெங்கடப்பா, 62, முருகேஷ், 26, முனியப்பா, 28, ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 31 ஆயிரத்து 800 ரூபாய் ரொக்கம், 16 தங்கத் தாலிகள், 8 குண்டு குழாய்கள், 3 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொரத ஹள்ளி கிராமத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவில், சிக்க உலகமதி கிராமத்தில் உள்ள கைவாரா யோகி நாராயணசாமி கோவில், மிட்டி மலஹள்ளி, எலபுரகி, தொட்ட சின்னஹள்ளி, அஜ்ஜப்பன ஹள்ளி, குந்தர்ஷனஹள்ளி, பாலமடுகு, தின்னுார் ஆகிய இடங்களில் பல்வேறு கோவில்களில் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் போலீசார் அடைத்தனர்.

