/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டிராக்டர் மோதி 5 வயது சிறுமி பலி
/
டிராக்டர் மோதி 5 வயது சிறுமி பலி
ADDED : அக் 25, 2025 10:57 PM
எச்.டி.கோட்டே: டிராக்டர் மோதியதில் மைசூரில் சாலையை கடக்க முயன்ற ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டேயில் கோழிப் பண்ணையில் பணியாற்றி வருபவர்கள், பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜகாத், சங்கீதா தம்பதி. இவர்களின் ஐந்து வயது பெண் குழந்தை சஞ்சனா.
நேற்று பண்ணையில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்தபோது, சஞ்சனாவும், மற்றொரு பெண் குழந்தை சவிதாவும், 5, விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென சாலையை கடந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர், இவர்கள் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே சஞ்சனா உயிரிந்தார். படுகாயமடைந்த சவிதாவுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர், வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார். எச்.கே.கோட்டே போலீசார் விசாரிக்கின்றனர்.

