வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி
வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தில் 50 சதவிகிதம் தள்ளுபடி
ADDED : ஜூன் 17, 2026 12:34 AM
அ நிறம் | அளவு
தங்கவயல்: தங்கவயல் போலீஸ் மாவட்ட எல்லைக்குள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, இ- - சலான் முறையின் கீழ் 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் விதி மீறல்கள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், 2026 மே இறுதி வரை, 10 லட்சத்து 74,000 ரூபாய் அபராத தொகை நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசின் உத்தரவு படி, 2026 ஜூன் 4 வரை பதிவு செய்யப்பட்டுள்ள, இ - -சலான் வழக்குகளின் நிலுவை அபராதத் தொகைக்கு, 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சிறப்பு சலுகை, இம்மாதம் 21 முதல், 2026 ஜூலை 10 வரை அமலில் இருக்கும்.
