/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தட்சிண கன்னடாவில் 534 பேருக்கு டெங்கு
/
தட்சிண கன்னடாவில் 534 பேருக்கு டெங்கு
ADDED : மே 16, 2025 10:19 PM

மங்களூரு: “தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 534 பேர் பாதிக்கப்பட்டனர்,” என, மாவட்ட சுகாதார அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று மங்களூரில் அளித்த பேட்டி:
ஒவ்வொரு ஆண்டும் மே 16ம் தேதி தேசிய டெங்கு காய்ச்சல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அப்போது, டெங்கு காய்ச்சல் பரவுவதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வுகள் மக்களிடையே ஏற்படுத்தப்படுகின்றன.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் தேங்கி இருக்கும் தண்ணீரில் இருந்து மட்டும் உற்பத்தி ஆவதில்லை. மாறாக, குளிர்சாதன பெட்டி, ஏ.சி., தண்ணீர் தொட்டிகளில் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாத நீர் இருந்தும் உற்பத்தியாகின்றன. இது பலருக்கு தெரிவதில்லை.
டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான தண்ணீரில் இனப்பெருக்கம் செய்கிறது. இது வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 534 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
டெங்கு காய்ச்சலை ஒழிக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள இடங்களை பொது மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.