/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் மீது கல் வீசிய 6 பேர் கைது
/
கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் மீது கல் வீசிய 6 பேர் கைது
கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் மீது கல் வீசிய 6 பேர் கைது
கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் மீது கல் வீசிய 6 பேர் கைது
ADDED : நவ 14, 2025 05:14 AM
பெலகாவி: கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மீது கல்வீசிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டன் கரும்புக்கு 3,500 ரூபாய் ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி, அரசுக்கு எதிராக, பெலகாவி மாவட்ட விவசாயிகள் கடந்த மாதம் 31ம் தேதி போராட்டத்தை துவக்கினர். கடந்த 7ம் தேதி 1 டன் கரும்புக்கு 3,300 ரூபாயாக அரசு நிர்ணயித்தது.
அன்றைய தினம் ஹுக்கேரி தாலுகா, ஹதரகி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், விவசாயிகளை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போலீசார், போலீஸ் வாகனம் மீது கற்கள் வீசப்பட்டன. டி.எஸ்.பி., உட்பட 12 போலீசார் காயம் அடைந்தனர். இதுகுறித்து யமகன்மரடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், போலீசார் மீது கல்வீசிய ஹுக்கேரி தாலுகா ஹெப்பால் கிராமத்தின் சன்னகவுடா, பிரசாந்த், விநாயக், மல்லப்பா, காகத்தியை சேர்ந்த சிவப்பா, சோம்நாத் ஆகிய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை பெலகாவி எஸ்.பி., பீமாசங்கர் குலேத் உறுதிப்படுத்தி உள்ளார்.
'கைதானவர்கள் விவசாயிகளா, எதற்காக கல்வீசினர். சதி செய்யும் நோக்கில் கல்வீசினரா என்பது பற்றி விசாரணை நடக்கிறது. வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம்' என, எஸ்.பி., கூறியுள்ளார்.

