/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலில் கவிழ்ந்த படகு உயிர் தப்பிய 8 மீனவர்கள்
/
கடலில் கவிழ்ந்த படகு உயிர் தப்பிய 8 மீனவர்கள்
ADDED : ஆக 05, 2025 07:13 AM

உடுப்பி : ராட்சத அலை மோதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்ததில், ஆந்திராவை சேர்ந்த எட்டு மீனவர்கள் கடலுக்குள் விழுந்து போராடினர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உடுப்பி மாவட்டம், உப்புண்டா கிராமம் அருகில் உள்ள கடற்பகுதியில் நேற்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை படகு மீது மோதியது. இதில், படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த எட்டு மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை கரையில் இருந்து பார்த்த மற்ற மீனவர்கள், உடனடியாக கடலில் குதித்து தத்தளித்த மீனவர்களை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகை, கயிறு கட்டி, மற்றொரு படகு மூலம், கரைக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் படகின் இன்ஜின் பழுதடைந்தது. மீன் பிடிக்க பயன்படுத்தும் வலை கடலுக்குள் மூழ்கியது. மீனவர்கள் அனைவரும் உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்ததால், உயிர் தப்பினர்.