தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தமிழர்களின் வாசிப்பு தாகம் தீர்க்க திறக்கப்பட்டுள்ள நுாலகம் 82 வயது முதியவர் பாராட்டு 

 தமிழர்களின் வாசிப்பு தாகம் தீர்க்க திறக்கப்பட்டுள்ள நுாலகம் 82 வயது முதியவர் பாராட்டு 

 தமிழர்களின் வாசிப்பு தாகம் தீர்க்க திறக்கப்பட்டுள்ள நுாலகம் 82 வயது முதியவர் பாராட்டு 


ADDED : பிப் 17, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: தினமலர் நுாலகத்திற்கு, 82 வ யது முதியவர், ஸ்கூட்டரில் தனியாக வந்து புத்தகங்களை படித்து சென்றார்.

பெங்களூரு தினமலர் அலுவலகத்தின், கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு லிங்கராஜபுரத்தில் வசிக்கும் ரத்தினசாமி, 82 என்பவர் நேற்று வந்தார். ஆன்மிக புத்தகங்களை ஆர்வமாக பார்வையிட்டார். அரை மணி நேரத்திற்கு மேலாக, நுாலகத்தில் அமர்ந்து படித்தார்.

பின், அவர் கூறியதாவது:

எனது சொந்த ஊர் தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள வெம்பகோட்டை கிராமம். இங்கு வந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தினமலர் நாளிதழை பல ஆண்டுகளாக படிக்கிறேன். தமிழர்களின் வாசிப்பு தாகம் தீர்க்க, இங்கு நுாலகம் திறந்து உள்ளீர்கள். இது உண்மையிலேயே நல்ல முயற்சி. இங்கு உள்ள நுாலகங்களில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பதே அரிது.

இங்கு தமிழ் புத்தகங்கள் மட்டுமின்றி, ஆங்கிலம், கன்னடம் புத்தகங்களும் உள்ளன. இந்த நுாலகத்தை தமிழர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இங்கு பொறுமையாக அமர்ந்து புத்தகங்களை படித்து செல்ல வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

வயதான காலத்தில் நடப்பதற்கு கஷ்டமாக உள்ளது என்று, பலர் கூறுவதை நாம் கேள்விபட்டு இருப்போம்.

ஆனால், தினமலர் நுாலகத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலோனோர், 70 முதல் 85 வயதுக்கு உட்பட்டவர்கள். பல கி.மீ., துாரம் பஸ்சில் பயணம் செய்து இங்கு வந்துள்ளனர்.

ஆனால், ரத்தினசாமி தனி ஆளாக லிங்கராஜபுரத்தில் இருந்து சிவாஜிநக ருக்கு, ஐந்து கி.மீ., துாரம் ஸ்கூட்டரில் வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

நுாலகத்திற்கு வந்த திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவரும், பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் வெற்றிலை வியாபாரம் செய்பவருமான சண்முகம், 67 கூறுகையில், ''10 ஆண்டுகளாக தினமலர் நாளிதழ் படிக்கிறேன்.

' 'ஆன்மிகம், வாரமலர் புத்தகங்கள் வெகுவாக என்னை கவர்ந்தவை. நுாலகம் பற்றி நாளிதழில் படித்ததும், இங்கு வர வேண்டும் என்று நினைத்தேன். வேலைக்கு மத்தியிலும் ஓய்வு நேரத்தில் இங்கு வந்து விட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. கடல் தாமரை புத்தகத்தை படித்ததை பாக்கியமாக கருதுகிறேன். ஏதோ ஒன்று சாதித்த, மனதிருப்தியுடன் இங்கிருந்து செல்கிறேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us