/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் மீட்பு
/
லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் மீட்பு
லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் மீட்பு
லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு பின் மீட்பு
ADDED : மே 13, 2025 11:57 PM

கலபுரகி : கலபுரகி கிம்ஸ் அரசு மருத்துவமனையின் லிப்டில் சிக்கிய ஒன்பது ஊழியர்கள், ஒன்றரை மணி நேரம் கழித்து சுவற்றை இடித்து மீட்கப்பட்டனர்.
கலபுரகி கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள லிப்டில் நேற்று காலை 9:30 மணியளவில் ஒன்பது ஊழியர்கள், ஆறாவது மாடிக்கு சென்றனர். ஆனால் லிப்ட் பழுதாகி, மூன்றாவது மாடியில் நின்றது.
லிப்டில் இருந்த ஊழியர், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். வழக்கமாக 10 முதல் 15 நிமிடங்களில் 'லிப்ட்' சரி செய்யப்படும். ஆனால், நேற்று அதற்கு மேலாகியும் சரி செய்ய முடியவில்லை.
இதற்கிடையில் சுவாசிப்பதில் பிரச்னையை உணர்ந்த ஊழியர்கள், பயத்தில் கூச்சலிட்டனர்.
லிப்டில் இருந்த நான்கைந்து பேர் சேர்ந்து, லிப்ட் கதவை திறந்தனர். அவர்கள் கண் முன் சுவர் இருந்ததை பார்த்து மேலும் பயந்தனர்.தொழில்நுட்ப ஊழியர்கள் முயற்சி தோல்வி அடைந்ததால், மூன்றாவது மாடியில் உள்ள சுவற்றை உடைக்க தீர்மானித்தனர்.
அதன் படி, டிரில்லர் கருவி மூலம், சுவர் இடிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின், லிப்டில் இருந்த ஒன்பது ஊழியர்களும் மீட்கப்பட்டனர்.
இது குறித்து மருத்துவ சூப்பிரண்ட் டாக்டர் சிவகுமார் கூறுகையில், ''மூன்றாவது மாடிக்கு லிப்ட் தேவை இல்லை என்ற காரணத்தால், அங்கு சுவர் எழுப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக பழுதான லிப்ட், மூன்றாவது மாடியில் நின்றுவிட்டது.
''அதன் பின் டிரில்லிங் கருவி கொண்டு வரப்பட்டது. சுவர் இடிக்கப்பட்டு ஊழியர்கள் மீட்கப்பட்டனர். வரும் நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
லிப்டில் சிக்கி, மீட்கப்பட்ட ஊழியர்கள் கூறுகையில், 'லிப்ட் நின்றவுடன், மின் விளக்கும், காற்றும் இல்லாததால், பயந்து விட்டோம். எங்களை மீட்ட பின்னரே உயிர் வந்தது' என்றார்.