sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அடர்ந்த வனப்பகுதியில் அழகான குகை

அடர்ந்த வனப்பகுதியில் அழகான குகை

அடர்ந்த வனப்பகுதியில் அழகான குகை


ADDED : மார் 12, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலோர மாவட்டமான உத்தர கன்னடாவில், சுற்றுலா பயணியரை கவரும் ஏராளமான, சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில் ஒன்று கவாலா குகை. தண்டேலி வன சரணாலயத்தின், மைய பகுதியில் அமைந்துள்ளது.

குகையின் நுழைவுவாயிலை அடைய 375 படிக்கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். நுழைவு வாயில் பகுதியில், ஒரு சிவன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருக்கும் சிவலிங்கத்தை காண வளைந்து, நெளிந்து காணப்படும், குறுகலான பாதைக்குள் ஊர்ந்து செல்ல வேண்டும்.

சிவலிங்கத்தை தரிசனம் செய்தபின், குகையை விட்டு வெளியே வர வேறு வழி உள்ளது. பின், குகை உச்சிக்கு செல்லலாம். மலை உச்சிக்கு செல்லும் வழியில், காளி ஆற்றின் அழகிய காட்சியை கண்டு ரசிக்கலாம். குகைக்கு தனியாக யாரும் செல்ல முடியாது. வனத்துறையினர் அழைத்து செல்வர்.

தினமும் காலை 6:00 மணிக்கு, குகைக்குள் செல்லும் பயணம் துவங்குகிறது. தண்டேலியில் இருந்து சரணாலயத்திற்குள் செல்ல, ஜீப்புகள், தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்.

பெங்களூரில் இருந்து இந்த குகை 484 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. பஸ்சில் செல்பவர்கள் தண்டேலிக்கு நேராக செல்லலாம். ரயிலில் செல்பவர்கள் அம்பேவாடி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம். விமானத்தில் சென்றால் மங்களூரு அல்லது கோவா சென்று, அங்கிருந்து வர வேண்டும்.

-நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us