/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 மணி நேரமாகியும் வராத ஆம்புலன்ஸ் கைகொடுத்து காப்பாற்றிய 'சரக்கு வாகனம்'
/
2 மணி நேரமாகியும் வராத ஆம்புலன்ஸ் கைகொடுத்து காப்பாற்றிய 'சரக்கு வாகனம்'
2 மணி நேரமாகியும் வராத ஆம்புலன்ஸ் கைகொடுத்து காப்பாற்றிய 'சரக்கு வாகனம்'
2 மணி நேரமாகியும் வராத ஆம்புலன்ஸ் கைகொடுத்து காப்பாற்றிய 'சரக்கு வாகனம்'
ADDED : டிச 09, 2025 06:26 AM

உடுப்பி: உடல் நலம் பாதித்தவரை அழைத்து செல்ல இரண்டு மணி நேரமாகியும், '108' ஆம்புலன்ஸ் வாகனம் வராததால், சரக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார். உரிய நேரத்தில் சென்றதால் உயிர் பிழைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடுப்பியின் உதய்வாராவை சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் உறவினருக்கு, நேற்று முன்தினம் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
அவர்கள், இரவு 7:30 மணிக்கு '108' ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். 9:30 மணியாகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. தனியார் ஆம்புலன்சுக்கு அழைத்தும் வரவில்லை.
நோயாளியின் நிலை மோசமானதால், அம்பல்பாடியை சேர்ந்த சமூக ஆர்வலர் விசு ஷெட்டிக்கு, குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். அவர், சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனத்துடன் அங்கு சென்றார். நோயாளியை வசதியாக அழைத்து செல்ல, அவர்கள் வீட்டில் இருந்த கட்டிலை, வாகனத்தில் வைத்தார்.
பின், உடல் நலம் பாதித்த நபரை, அந்த கட்டிலில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். நோயாளியை உரிய நேரத்தில் கொண்டு வந்ததால், உயிர் பிழைத்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் விசு ஷெட்டிக்கு, நோயாளியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
விசு ஷெட்டி கூறியதாவது:
கடந்த ஓராண்டாக இங்கு '108' ஆம்புலன்ஸ் சேவை சரியாக செயல்படுவதில்லை. இதனால் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவத்திலும், இரண்டு மணி நேரமாகியும் எந்த ஆம்புலன்சும் வரவில்லை.
வேறு வழியின்றி சரக்கு வாகனத்தில் அழைத்து வந்தோம். இவ்விஷயத்தில் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. இம்மாவட்டத்தில், 18 ஆம்புலன்ஸ் சேவைகள் இருந்தும், ஐந்தாறு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

