தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மே, ஜூனில் மட்டுமே தென்படும் அணை

 மே, ஜூனில் மட்டுமே தென்படும் அணை

 மே, ஜூனில் மட்டுமே தென்படும் அணை


ADDED : பிப் 19, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே, ஜூனில் மட்டுமே ஒரு அணை தென்படும் விசித்திர காட்சியை ஷிவமொகாவில் நீங்கள் காணலாம். தமிழகத்தின் சேலம் மாவட்டம், மேட்டூர் அணை கட்டும் போது, அங்கிருந்த பல கிராம மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். அணை கட்டிய பின், தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. அணையில் நீர் இருப்பு குறையும் போது, கிராமத்தில் உள்ள சில கோவில்கள், நந்தி சிலை, கிறிஸ்துவ தேவாலயம் தென்படும்.

இதுபோன்று, கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா மாவட்டம், சாகர் தாலுகாவின் லிங்கனமக்கி அணையின் நீர்தேக்க பகுதியில், மற்றொரு அணை இருக்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா. ஆம்... அப்போதைய மைசூரு மாநிலமாக இருந்தபோது, 1939 முதல் 1948 ஆண்டுகளுக்கு இடையே ஷராவதி ஆற்றின் குறுக்கே மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக இந்த அணை கட்டப்பட்டது.

இது, ஹிரேபாஸ்கரா அணை என்றும், மதேனுார் அணை என்றும் அழைக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து 1949 முதல் 1960 வரை மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இந்த அணை, 'சைபோன்' வடிவமைப்பில் கட்டப்பட்டு உள்ளது.

சைபோன் அமைப்பு என்பது புவிஈர்ப்பு மற்றும் காற்று அழுத்தத்தை பயன்படுத்தி, ஒரு டிரம் போன்ற வளையத்தில் உள்ள தண்ணீரை, இயந்திரங்கள் உதவியின்றி, குழாய் வழியாக மற்றொரு தாழ்வான டிரம்மிற்கு மாற்றும் எளிமையான வடிவமாகும்.

அணையில், 11 சைபோன்கள், ஒவ்வொன்றும் 18 அடி அகலமும், 58 அடி உயரமும் கொண்டதாகும். நீர்மட்டம் குறிப்பிட்ட அளவை எட்டும்போது, அதிகப்படியான நீரை தானாகவே வெளியேற்றும். நீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்த, மனிதர்களின் தலையீடு தேவையில்லை.

இந்த அணை, 120 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. அதன்பின் லிங்கனமக்கி அணை கட்டப்பட்டதால், இதில் தேங்கும் நீர், ஹிரேபாஸ்கரா அணையை மூழ்கடித்து விடும்.

ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் இந்த அணை நம் கண்களுக்கு தென்படாது. அணையில் நீர் வரத்து குறையும் போது, குறிப்பாக, மே, ஜூன் மாதங்களில் மட்டுமே மூழ்கிய ஹிரேபாஸ்கரா அணை தெரியும். அப்போது தான், மக்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவர். இதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை. அப்பகுதி வழுக்கும் தன்மை கொண்டது. எனவே, ஜாக்கிரதையாக நடந்து செல்ல வேண்டும்.

எப்படி செல்வது?

 பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஷிவமொக்கா விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 114 கி.மீ., தொலைவில் உள்ள அணைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

 ரயிலில் செல்வோர் தாளகுப்பா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 13 கி.மீ., தொலைவில் உள்ள அணைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

 பஸ்சில் செல்வோர், சாகர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள அணைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us