/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக்கில் பட்டாசு தெறித்ததால் தகராறு; வாலிபரை தாக்கிய 5 பேர் சிக்கினர்

ADDED : அக் 22, 2025 04:51 AM
ஹென்னுார்:: பைக் மீது பட்டாசு தெறித்ததால் ஏற்பட்ட தகராறில்: பெங்களூரு, ஹென்னுாரை சேர்ந்தவர் கிரண், 25. கடந்த 19ம் தேதி இரவு தன் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தார். அந்த வழியாக வந்த பைக் மீது, பட்டாசு தெறித்தது. பைக்கில் சென்றவர், கிரணை திட்டியதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.
அன்று இரவே அந்த நபர், ஒரு கும்பலுடன் வந்தார். கிரணை, ஐந்து பேரும் இரும்புக் கம்பியால் தாக்கினர். தடுக்க வந்த கிரணின் நண்பர் பரத் என்பவருக்கும் அடி விழுந்தது.
இதுகுறித்து பரத் அளித்த புகாரில், தாக்குதலில் ஈடுபட்ட அமின் ஷெரீப், 24, நண்பர்கள் சையது அர்பாஸ், 24, சையத் காதர், 25, 17 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் என, 5 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவானது.
பொது இடத்தில் இரும்பு கம்பி, வாளை காண்பித்து மக்களை அச்சுறுத்திய அமின் ஷெரீப், சையது அர்பாஸ், சையது காதர் பெயர்கள் ரவுடி பட்டியலில் சேர்க்கப்படும் என்று, கிழக்கு மண்டல டி.சி.பி., தேவராஜ் கூறி உள்ளார். சிறுவர்கள் இருவரும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.