தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு

 கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு

 கடன் தொல்லையால் விரக்தி மின்கோபுரம் மீது ஏறிய நபரால் பரபரப்பு


ADDED : பிப் 27, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, அதை அடைக்க முடியாமல் திணறும் நபர், உயரமான மின் கோபுரம் மீது ஏறி அமர்ந்ததால், சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.

துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகா பிகேஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கோபால், 40. இவர் குடும்ப தேவைக்காக பல இடங்களில், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். கடன் சுமை அதிகரித்தது. கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். அடைக்க வழி தெரியாமல் திணறினார்.

வெறுப்படைந்த கோபால், நேற்று காலை பிகேஹள்ளி - தளவேஹள்ளி சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள, 120 அடி உயரமுள்ள ஹை டென்ஷன் மின் கோபுரம் மீது ஏறி அமர்ந்து கொண்டார். இதை கண்ட கிராமத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த திருமணி போலீசார், கோபாலை சமாதானம் செய்த, கீழே இறங்க வைக்க முயற்சித்தனர்.

பல மணி நேரம் பேசிய பின், சமாதானம் அடைந்தார். ஆனாலும், அவரால் கீழே இறங்க முடியவில்லை. அதன்பின் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர். ஏணி, கயிறு, ஹார்னஸ் பெல்ட் போன்ற சாதனங்களை பயன்படுத்தி, அவரை பாதுகாப்பாக கீழே அழைத்து வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us