தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாற்றுத்திறனாளியாக இருந்தும் விதிகளை மதிக்கும் புருஷோத்தம்

மாற்றுத்திறனாளியாக இருந்தும் விதிகளை மதிக்கும் புருஷோத்தம்

மாற்றுத்திறனாளியாக இருந்தும் விதிகளை மதிக்கும் புருஷோத்தம்


UPDATED : நவ 01, 2026 12:00 AM

ADDED : அக் 31, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 12:00 AM ADDED : அக் 31, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –: ஒடிஷா மாநிலம், ராயகடா மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தம் கரடியா, 28. மாற்றுத்திறனாளியான இவர், பிழைப்பு தேடி பெங்களூருக்கு வந்தார். மாற்றுத்திறனாளியாக இருந்தும், அந்த கஷ்டத்தை ஒதுக்கி தள்ளி, உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். எலக்ட்ரிக் சக்கர நாற்காலி வாகனத்தில், பெங்களூரு முழுதும் சுற்றி வந்து, உணவு டெலிவரி செய்கிறார்.

பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாமல் பயணிக்கின்றனர். ஆனால் புருஷோத்தம், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகிறார். மற்றவருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார். பெங்களூருக்கு வந்த ஆரம்ப நாட்களில், ‘டெலி காலராக’ பணியாற்றினார். அதன்பின் டெலிவரி பணியை துவக்கினார். தினமும் காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பணியாற்றுகிறார்.

புருஷோத்தம் கூறியதாவது:

நம் வாழ்க்கை விலை மதிப்பு மிக்கது. இதை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். நம்மை பற்றி நமக்கு, எவ்வளவு தன்னம்பிக்கை இருந்தாலும், சாலைகளில் நம்மை போன்று, ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சாலைகளில், நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நுாற்றுக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து, பெங்களூருக்கு வந்து பிழைக்கிறோம். சொந்த ஊரில் வசிக்கும் நம் குடும்பத்தினர் மீதும், அக்கறை வேண்டும்.

பெங்களூரு மக்கள், மிகவும் அன்பானவர்கள். கடந்த ஆறு மாதங்களாக நான் டெலிவரி பணி செய்கிறேன். நான் பணியாற்றும் நிறுவனம், ரெஸ்டாரென்ட் ஊழியர்கள் உட்பட, அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். யாரும் என்னை மாற்றுத்திறனாளியாக பார்ப்பது இல்லை. நடந்து கொண்டது இல்லை.

நான் டெலிவரி பாயாக பணியாற்றுவதுடன், என் எதிர்கால நலனுக்காக, போட்டி தேர்வுகள் எழுதி, அரசு பணிக்கு முயற்சிக்கிறேன். இதில் தேர்ச்சி பெற்று, அரசு பணியில் அமர்ந்து, என் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் கனவு.

உடல் திறன் என்பது எப்போதும், மன உறுதியை விட பெரியது அல்ல. அனைவரும் தங்களை நம்பி ஒரு குடும்பம் உள்ளது என்பதை உணர்ந்து, ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us