/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலியின் கணவர் கொலை தலைமறைவான நண்பருக்கு வலை
/
கள்ளக்காதலியின் கணவர் கொலை தலைமறைவான நண்பருக்கு வலை
கள்ளக்காதலியின் கணவர் கொலை தலைமறைவான நண்பருக்கு வலை
கள்ளக்காதலியின் கணவர் கொலை தலைமறைவான நண்பருக்கு வலை
ADDED : ஆக 13, 2025 10:58 PM
மாதநாயகனஹள்ளி: கள்ளக்காதலிக்காக, 30 ஆண்டு பழகிய நண்பரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபரை, போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு, மாச்சோனஹள்ளியின், டி குரூப் லே - அவுட்டில் வசித்தவர் விஜய்குமார், 39. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரும், தனஞ்செயா, 39, என்பவரும் நண்பர்கள். இவர்களுக்குள் 30 ஆண்டு கால நட்பு இருந்தது.
விஜய்குமாருக்கு 10 ஆண்டுகளுக்கு முன், ஆஷா, 34, உடன் திருமணம் நடந்தது. காமாட்சி பாளையாவில் தம்பதி மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். நண்பர் தனஞ்செயா, அவ்வப்போது விஜய் குமாரின் வீட்டுக்கு வருவார்.
அப்போது இவரது மனைவி ஆஷா அறிமுகமானார். இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இருவரும் ரகசியமாக சந்தித்து கொண்டனர்.
இவர்களின் கள்ளக்காதல், விஜய்குமாருக்கு தெரிந்து வருத்தம் அடைந்தார். மனைவிக்கு புத்திமதி சொல்லி திருத்த முயற்சித்தார். ஆனால் பயன் இல்லை.
இருவரும் நெருக்கமாக உள்ள போட்டோக்களை விஜய்குமார் பார்த்தார். மனைவி இடம் மாறினால் மனம் மாற்றம் ஏற்படலாம் என, நினைத்து காமாட்சி பாளையாவில் இருந்து, மாச்சோனஹள்ளியின், டி குரூப் லே - அவுட்டுக்கு குடிபெயர்ந்தார்.
அப்போதும் மனைவி மற்றும் நண்பரின் கள்ளத்தொடர்பு நீடித்தது.
இந்நிலையில், கடந்த 11ம் தேதி மாலை, வீட்டில் இருந்து வெளியே சென்ற விஜய்குமார், மீண்டும் திரும்பவில்லை. நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு அருகில், அவர் கொலை செயப்பட்ட நிலையில் கிடந்தார்.
இதை கவனித்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.
கொலையானவர் விஜய்குமார் என்பதையும், கள்ளத்தொடர்பு காரணமாக கொலை நடந்துள்ளது என்பதையும் கண்டுபிடித்தனர்.
இவரது மனைவியை கைது செய்து விசாரிக்கின்றனர். தனஞ்செயா தலைமறைவாகி விட்டார்.
அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்திய பின்னரே, எப்படி கொலை நடந்தது என்பது தெரியும் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.