/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உள்ளத்தை கொள்ளையடித்த பூக்களின் அணிவகுப்பு
/
உள்ளத்தை கொள்ளையடித்த பூக்களின் அணிவகுப்பு
ADDED : நவ 28, 2025 05:55 AM

பெங்களூரு: கர்நாடகா ராஜ்யோத்சவா, குழந்தைகள் தினத்தையொட்டி பெங்களூரு கப்பன் பூங்காவில் மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது.
கண்காட்சியில், வன விலங்கு, வாகனங்கள், பறவைகள் போன்றவை மலர்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளன. வண்ண, வண்ண மலர்களை காண காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும்; சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. சீருடையில் வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
தற்போது, கப்பன் பூங்கா காதலர்கள் படையெடுப்புக்கு தயாராகி உள்ளது. ரீல்ஸ் பிரியர்களுக்கு தீணியாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமே வேண்டாம். மனதை மயக்கும் மலர் கண்காட்சியை யாரும் தவற விட்டுவிடாதீங்க.
... புல் அவுட் ...
JPM_7627
* பார்த்தேன் ரசித்தேன்
முதல் முறை கப்பன் பார்க் வந்தேன். வித்தியாசமான செடி, மலர்களை பார்த்து ரசித்தேன். ஊட்டி மலர் கண்காட்சியை விட, கப்பன் பூங்கா மலர் கண்காட்சி சிறப்பாக இருக்கிறது. நண்பர்களுடன் வந்து உள்ளோம். மறக்க முடியாத அனுபமாக இருக்கிறது.
கல்கி, சென்னை.
JPM_7659
* மன நிறைவு
நுழைவு கட்டணமோ குறைவு, மலர்களை பார்த்தவுடன் மனதுக்கு நிறைவு. கப்பன் பூங்காவில் முதன் முறையாக மலர் கண்காட்சியை பார்க்கிறேன். அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ளது. அரிய மலர்களை பார்த்து பிரமிப்பு அடைந்தேன்.
பாண்டியராஜா, கல்யாண் நகர்,
பூர்வீகம் தேனி.
JPM_7652
பாகற்காய், குடை மிளகாய், தக்காளி, ஆரஞ்சு, கத்திரிக்காயால் செய்யப்பட்ட கும்கி யானை.
JPM_7641
மாவட்ட வாரியாக விளையும் தானியங்களை வைத்து உருவாக்கப்பட்ட கர்நாடக மாநில வரைபடம்.
JPM_7599
மலர் அலங்காரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஹம்பி தேர்.
JPM_7586
காதல் மயக்கத்தில் இருக்கும் சேவல் - கோழி.
JPM_7584
சாமந்தி பூ, இலைகளால் தயாரிக்கப்பட்ட வண்ணமயமான டிராக்டர்.
JPM_7576
மக்கள் பயன்பாட்டிற்கு லால்பாக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட எலக்ட்ரிக் வாகனத்துக்கு தென்னை ஓலைகளால் அலங்காரம்.
JPM_7672
இதயம் போல் வடிவமைக்கப்பட்டுள்ள பிருந்தாவனத்தில் பூக்கள் நடுவில் ராதா - கிருஷ்ணர்

