sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடகாவில் ஒலிக்க துவங்கியது... கலகக்குரல்! தனி மாநிலம் கேட்டு 15 மாவட்டங்களை பிரிக்க கோஷம் முதல்வர் சித்தராமையாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., கடிதம்

/

கர்நாடகாவில் ஒலிக்க துவங்கியது... கலகக்குரல்! தனி மாநிலம் கேட்டு 15 மாவட்டங்களை பிரிக்க கோஷம் முதல்வர் சித்தராமையாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., கடிதம்

கர்நாடகாவில் ஒலிக்க துவங்கியது... கலகக்குரல்! தனி மாநிலம் கேட்டு 15 மாவட்டங்களை பிரிக்க கோஷம் முதல்வர் சித்தராமையாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., கடிதம்

கர்நாடகாவில் ஒலிக்க துவங்கியது... கலகக்குரல்! தனி மாநிலம் கேட்டு 15 மாவட்டங்களை பிரிக்க கோஷம் முதல்வர் சித்தராமையாவுக்கு காங்., - எம்.எல்.ஏ., கடிதம்


ADDED : நவ 11, 2025 11:27 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவை இரண்டாக பிரித்து 15 மாவட்டங்களை ஒருங்கிணைத்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கலகக்குரல் மீண்டும் ஒலிக்க துவங்கி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு, காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே கடிதம் எழுதி உள்ளார். இது, மாநிலத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கர்நாடகாவின் தென் மாவட்டங்களை விட, வடக்கு மாவட்டங்கள் பின்தங்கி உள்ளன என்பது உண்மை தான். உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள, கர்நாடக அரசு போதிய நடவடிக்கை எடுத்தாலும், வடமாவட்டங்கள் இன்னும் மேம்பாட்டில் பின்தங்கியே உள்ளன.

பெரும் பரபரப்பு தென் மாவட்டங்களுக்கு இணையாக வடமாவட்டங்களும் மேம்பட வேண்டுமென்றால், கர்நாடகாவை இரண்டாக பிரித்து வடமாவட்டங்களை ஒருங்கிணைத்து, தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என, மறைந்த பா.ஜ., முன்னாள் அமைச்சர் உமேஷ் கட்டி குரல் கொடுத்தார். உத்தர கர்நாடகா போராட்ட சமிதி என்ற அமைப்பின் மூலம் போராட்டமும் நடத்தி வந்தார்.

கடந்த 2021ல் ஒரு நிகழ்ச்சியில் உமேஷ் கட்டி பேசியபோது, 'நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனால், நாட்டின் உள்ள பெரிய மாநிலங்கள் இரண்டாக பிரிக்கப்படும். கர்நாடகாவையும் இரண்டாக பிரித்து, வடக்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் அமைப்போம்' என்று கூறி இருந்தார்.

அவரது கருத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 2022ல் உமேஷ் கட்டி மரணம் அடைந்த பின், தனி மாநிலமாக கோரிக்கை கோஷம் அப்படியே நின்று போனது. தற்போது மீண்டும் பிரிவினை குரல் ஒலிக்க துவங்கி உள்ளது.

கன்னட நாடு இந்த விவகாரம் தொடர்பாக பெலகாவியின் காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே, முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நிர்வாக வசதிக்காகவும், விரிவான மேம்பாட்டுக்காகவும் பீதர், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், பாகல்கோட், பெலகாவி, தார்வாட், கதக், கொப்பால், ராய்ச்சூர், உத்தர கன்னடா, ஹாவேரி, விஜயநகரா, பல்லாரி, தாவணகெரே ஆகிய 15 மாவட்டங்களை ஒருங்கிணைத்து, தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இந்த கோரிக்கையை நானும் ஆதரிக்கிறேன்.

ஒருங்கிணைந்த கர்நாடகாவில், வடக்கு மாவட்டங்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது; பாகுபாடு காட்டப்படுகிறது. மாற்றந்தாய் மனப்பான்மையை அனுபவித்து வருகிறோம்.

தனி மாநிலம் உருவாகினால், இன்னொரு கன்னட நாடு உருவாக்கப்படும் என்பது பெருமை சேர்க்கும் விஷயம்.

வடமாவட்டங்கள் அனைத்து வளங்களையும் கொண்டவை. தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவாக, உத்தர கன்னடா போராட்ட சமிதி மூலம், ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு முறை பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. வடமாவட்ட மக்கள், தனி மாநிலம் உருவாக வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர்.

தயவு செய்து எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, 15 மாவட்டங்களை ஒருங்கிணைத்து தனி மாநிலம் உருவாக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஓயாது இதுதொடர்பாக ராஜு காகே நேற்று அளித்த பேட்டி:

கர்நாடகாவின் தெற்கு பகுதியை விட, வடக்கு பகுதி மேம்பாடு அடைவதில் மிகவும் பின் தங்கி உள்ளது. தெற்கின் மீது காட்டும் அக்கறை, எங்கள் மீது ஏன் இல்லை? அனைவரும் கன்னட தாயின் மக்கள். ஆனாலும் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை?

தனி மாநிலம் தொடர்பாக, பெலகாவி சட்டசபையில் பிரச்னை எழுப்பி விரிவாக பேசுவேன். தனி மாநில விஷயத்தில் போராட்டத்திற்கு தலைமை தாங்கவும் தயாராக உள்ளேன். வடமாவட்டங்களின் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் என்னுடன் உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் ஓயாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் பதவி, தொகுதிக்கு நிதி கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் ராஜு காகே, தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய போவதாக ஒரு முறை கூறி இருந்தார்.

முதல்வர் சித்தராமையா சமாதானம் செய்தார். தற்போது தனி மாநிலம் தொடர்பாக கடிதம் எழுதி, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us