/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பப்'பில் பெண்களிடம் மொபைல் போன் நம்பர் கேட்ட வாலிபருக்கு அடி, உதை
/
'பப்'பில் பெண்களிடம் மொபைல் போன் நம்பர் கேட்ட வாலிபருக்கு அடி, உதை
'பப்'பில் பெண்களிடம் மொபைல் போன் நம்பர் கேட்ட வாலிபருக்கு அடி, உதை
'பப்'பில் பெண்களிடம் மொபைல் போன் நம்பர் கேட்ட வாலிபருக்கு அடி, உதை
ADDED : டிச 19, 2025 05:17 AM
ஞானபாரதி: 'பப்'பில் பெண்களிடம் மொபைல் போன் நம்பரை கேட்ட, வாலிபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.
பெங்களூரு ஞானபாரதியை சேர்ந்தவர் ஹேமந்த், 26. இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழிகள் இருவருடன் நாகரபாவியில் உள்ள, 'பப்'பிற்கு சென்றார். அங்கு வந்திருந்த உமேஷ், 25, ஹேமந்த்தின் தோழிகளிடம் சென்று மொபைல் போன் நம்பரை தரும்படி கேட்டுள்ளார்.
இதனால், ஹேமந்துக்கும், உமேஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பப் ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பார்ட்டி முடிந்த பின் வெளியே வந்த போது, ஹேமந்த் - உமேஷ் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த ஹேமந்த், தனது நண்பர்கள் சிலரை பப்பிற்கு வரவழைத்தார். அவர்களுடன் சேர்ந்து உமேஷை பிடித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து அங்கு வந்த ஞானபாரதி போலீசார், உமேஷ், ஹேமந்த் உள்ளிட்டோரை பிடித்து சென்றனர்.
தாக்குதல் குறித்து உமேஷ் அளித்த புகாரில் ஹேமந்த், அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவானது. தங்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக, இரு பெண்கள் அளித்த புகாரில், உமேஷ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.