/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மடாதிபதி மொபைல் போனில் ஆபாச படங்களால் அதிர்ச்சி
/
மடாதிபதி மொபைல் போனில் ஆபாச படங்களால் அதிர்ச்சி
ADDED : ஆக 07, 2025 11:04 PM

யாத்கிர்: முஸ்லிமாக இருந்து லிங்க தீட்சை பெற்று மடாதிபதி ஆனவரின் மொபைல் போனில் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், யாத்கிர் மாவட்டம், சஹாபுரா தாலுகாவை சேர்ந்தவர் முகமது நிசார், 35. இவர் பசவண்ணரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கடந்தாண்டு பசவ கல்யாணாவின், பசவ பிரபு சுவாமிகளிடம் லிங்க தீட்சை பெற்றுக் கொண்டார். முகமது நிசாரின் பெயர் நிஜலிங்க சுவாமிகள் என்று மாற்றப்பட்டது. பசவண்ணரின் தத்துவம் குறித்து பிரசாரம் செய்து வருகிறார்.
சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகாவின், சவுடஹள்ளியில் குருமல்லேஸ்வர கிளை மடம் அமைக்கப்பட்டது.
ஒன்றரை மாதத்துக்கு முன், இந்த மடத்தின் மடாதிபதியாக நிஜலிங்க சுவாமிகள் நியமிக்கப்பட்டார். இவர் அடிப்படையில் முஸ்லிம் என்பதை கிராமத்தினரிடம் கூறவில்லை.
சில நாட்களுக்கு முன், நிஜலிங்க சுவாமிகள், தன் மொபைல் போனை மடத்தில் இருந்த தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கொடுத்திருந்தார். அவர் எதிர்பாராமல் மொபைல் போனை ஆன் செய்து பார்த்தபோது, நிஜலிங்க சுவாமிகளின் ஆதார் கார்டு, அவரது உண்மையான பெயர், மதம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மட்டுமின்றி, அவரது மொபைல் போனில் ஆபாச வீடியோக்கள், படங்களும் இருந்தன. மடாதிபதி மது அருந்தியது, பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களும் இருந்தன.
இதையறிந்த கிராமத்தினர், நிஜலிங்க சுவாமியை மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரி வருகின்றனர். இவர் மீது சட்டப்படி வழக்கு தொடர, அகில இந்திய வீரசைவ மஹா சபா முடிவு செய்துள்ளது.