/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோத செயலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை: சித்தராமையா
/
சட்டவிரோத செயலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை: சித்தராமையா
சட்டவிரோத செயலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை: சித்தராமையா
சட்டவிரோத செயலில் ஈடுபடும் போலீசார் மீது நடவடிக்கை: சித்தராமையா
ADDED : அக் 28, 2025 11:42 PM

பெங்களூரு: ''கர்நாடகாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு, விதான்சவுதாவில் உள்ள மைய மண்டபத்தில் நேற்று போலீஸ் ஏட்டுகளுக்கு புதிய தொப்பி அறிமுகம் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், தலைமை செயலர் ஷாலினி, டி.ஜி.பி., சலீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
56 ஆண்டுகள் முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஸ்லோச்' வகை தொப்பிகளையே, போலீஸ் ஏட்டுகள் பயன்படுத்தி வந்தனர். இந்த தொப்பிகள் அணிவது அசவுகரியமாக இருக்கிறது என்று அவர்கள் கூறி வந்தனர். இதனால், 56 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த தொப்பிகளுக்கு பதிலாக, தெலுங்கானா போலீஸ் பயன்படுத்தும் வகையிலான தொப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொப்பி மாற்றப்பட்டது போல, போலீசார் தங்கள் திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த போலீஸ் தர வரிசை பட்டியலில், இந்திய அளவில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. வரும் காலத்தில் முதல் இடத்திற்கு வர வேண்டும். இதற்காக, அனைவரும் பாடுபட வேண்டும்.
கர்நாடகாவை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, போதைப்பொருள் எதிர்ப்பு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
நற்பெயர் குற்றவாளிகளுடன் போலீசார் பழகக்கூடாது. நாளுக்கு நாள் போலீசார் மீதான பயம், குற்றவாளிகள் மத்தியில் குறைந்து வருகிறது. இது குறித்து நீங்களே சிந்தித்து பாருங்கள். சில போலீசார், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
போதைப்பொருள் கடத்துவோர் யார் என தெரிந்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் ஒழுங்காக செயல்பட்டால் தான் அரசுக்கு நற்பெயர் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கன்டெய்னர்கள் போலீஸ் ஏட்டுகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது. 8,500 ஏட்டுகளுக்கான காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போலீசார் ரெஸ்ட் எடுக்கும் வகையில், 15,000 கன்டெய்னர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மேலும் விரிவுபடுத்தப்படும். பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்.

