அரசு மருத்துவமனையில் சிகிச்சை நடிகர் தர்ஷனுக்கு அனுமதி
அரசு மருத்துவமனையில் சிகிச்சை நடிகர் தர்ஷனுக்கு அனுமதி
UPDATED : நவ 27, 2026 12:06 AM
ADDED : நவ 27, 2026 12:06 AM

பெங்களூரு: விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நடிகர் தர்ஷன், பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இவர், முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற அனுமதிக்க கோரி, பெங்களூரு, 59வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அறிக்கை அளிக்கும்படி சிறை மருத்துவருக்கு, நீதிமன்றம் அறிவுறுத்தியது. மருத்துவமனைக்கு சென்று தர்ஷன் சிகிச்சை பெறுவது கட்டாயம் என மருத்துவர் அறிக்கை அளித்தார். இதனால், தர்ஷன் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதிக்கும்படி தர்ஷன் தரப்பு வக்கீல் வாதிட்டார்.
தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுவதற்கு, அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால், தர்ஷன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது குறித்து திங்கட்கிழமை விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
