/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்; நடிகர் தர்ஷனின் மனைவி அதிருப்தி
/
புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்; நடிகர் தர்ஷனின் மனைவி அதிருப்தி
புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்; நடிகர் தர்ஷனின் மனைவி அதிருப்தி
புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்; நடிகர் தர்ஷனின் மனைவி அதிருப்தி
ADDED : ஜன 01, 2026 06:05 AM

பெங்களூரு: தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத, பெங்களூரு போலீஸ் மீது, நடிகர் தர்ஷன் மனைவி விஜயலட்சுமி அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களான சுதீப், தர்ஷன் இடையே நீயா, நானா போட்டி உள்ளது.
கடந்த மாதம் தாவணகெரேயில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் மனைவி விஜயலட்சுமி, நடிகர் சுதீப் பெயரை குறிப்பிடாமல், அவரை விமர்சிக்கும் வகையில் பேசினார்.
இதனால், கடுப்பான சுதீப் ரசிகர்கள், விஜயலட்சுமியை சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வசைபாடினர். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம், விஜயலட்சுமி புகார் செய்தார்.
இந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், அதிருப்தி அடைந்த விஜயலட்சுமியின் இன்ஸ்டாகிராம் பதிவு:
நம் நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒன்று தான் என்று நம்பி வருகிறேன். எனது அந்த நம்பிக்கை இப்போது கேள்விக்குறியாகி உள்ளது. நான் அளித்த புகார் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஆனால், இன்னொரு பெண் அளித்த புகார் தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டு, ஒரே நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கும் விஷயத்தில், போலீசாருக்கு அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீதிக்காக காத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

