/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரவிந்த் ரெட்டியுடன் உறவில் இருந்தேன் உண்மையை ஒப்புக்கொண்டார் நடிகை
/
அரவிந்த் ரெட்டியுடன் உறவில் இருந்தேன் உண்மையை ஒப்புக்கொண்டார் நடிகை
அரவிந்த் ரெட்டியுடன் உறவில் இருந்தேன் உண்மையை ஒப்புக்கொண்டார் நடிகை
அரவிந்த் ரெட்டியுடன் உறவில் இருந்தேன் உண்மையை ஒப்புக்கொண்டார் நடிகை
ADDED : நவ 17, 2025 02:26 AM

கோவிந்த்ராஜ்நகர்: 'கிரிக்கெட் அணி உரிமையாளர் அரவிந்த் வெங்கடேஷ் ரெட்டியுடன் உறவில் இருந்தது உண்மை தான்' என்று, அவர் மீது புகார் அளித்த நடிகை உண்மையை ஒப்பு கொண்டு உள்ளார்.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தொழில் அதிபரும், 'பல்லாரி டஸ்கர்ஸ்' கிரிக்கெட் அணி உரிமையாளருமான அரவிந்த் வெங்கடேஷ் ரெட்டி, 40, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, ஒசகெரேஹள்ளியில் வசிக்கும் 36 வயது நடிகை புகார் செய்தார்.
கார், வீடு இந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் அரவிந்த் ரெட்டியை கைது செய்தனர். விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
அரவிந்த் ரெட்டி கூறியதாவது:
எனக்கும், என் மீது புகார் அளித்த நடிகைக்கும் 2023ல் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களில் அவர் என்னுடன் நெருக்கமாகி விட்டார். திருமணம் செய்யாமல் கணவன், மனைவி போல ஒன்றாக வாழ்ந்தோம். அவரை திருமணம் செய்ய நினைத்தேன்.
இதற்கிடையில் நடிகைக்கு, இன்னொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது; அவருடன் உறவில் இருந்தார். அந்த நபருடன் வெளிநாடு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்தார். இதுபற்றி கேட்டதால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
நான், அந்த நடிகைக்கு விலை உயர்ந்த கார் பரிசாக கொடுத்து உள்ளேன். வீடு கொடுத்து இருக்கிறேன். நடிகையின் சகோதரர் திருமணத்திற்கு உதவி செய்து உள்ளேன். என் மீது பொய் புகார் அளித்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்பளிப்பு நடிகை கூறியதாவது:
இலங்கையில், 2023 ல் நடந்த கிரிக்கெட் போட்டியில் அரவிந்த் ரெட்டியை சந்தித்தேன். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் ஒன்றரை ஆண்டுகள் உறவில் இருந்தேன். அந்த நேரத்தில், நான் வேலைக்கு செல்லவில்லை. சில உதவிகள் செய்தார். அவரிடம் இருந்து நான் எதையும் கேட்டு பெறவில்லை. அவர் அன்பளிப்பாக கொடுத்ததை வாங்கி கொண்டேன்.
எனக்கு மட்டும் அவர் பரிசு பொருட்கள் கொடுக்கவில்லை. அவருடன் இருந்த அனைவருக்கும் பரிசுகளை அள்ளி கொடுத்தார். அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்ட போது, அவரிடம் இருந்து விலகினேன். எனக்கு ஒரு காரை பரிசாக கொடுத்தார். அந்த காரை உடனே திருப்பி அனுப்பி வைத்தேன்.
தொல்லை எனக்கு வீடு வழங்கியதாக பொய் சொல்கிறார். நான் இப்போது கூட வாடகை வீட்டில் வசிக்கிறேன். தினமும் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அவர், ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க கூடியவர். நான் சம்பாதித்த பணத்தில் அவருக்கு என்ன வாங்கி கொடுக்க முடியுமோ, அதை கொடுத்து இருக்கிறேன்.
நான் அவரை விரும்பிய நேரத்தில், அவர் என்னுடன் இருக்கவில்லை. திடீரென வெளிநாடு சென்று விடுவார். என்னை தொடர்பு கொள்ளவே மாட்டார்.
அவருக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் என்னுடன் பேசுவார். எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால், அவரை விட்டு விலக நினைத்தேன். இதனால், எனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்தார்.
இவ்வாறு நடிகை கூறி உள்ளார்.

