/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா மீது நடிகை தீபிகா தாஸ் அதிருப்தி
/
நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா மீது நடிகை தீபிகா தாஸ் அதிருப்தி
நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா மீது நடிகை தீபிகா தாஸ் அதிருப்தி
நடிகர் யஷ்ஷின் தாய் புஷ்பா மீது நடிகை தீபிகா தாஸ் அதிருப்தி
ADDED : ஆக 23, 2025 11:03 PM

பெங்களூரு: தன் தயாரிப்பில் முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் யஷ்ஷின் தாயும், தயாரிப்பாளருமான புஷ்பா அருண்குமார், சர்ச்சைக்கு காரணமாகியுள்ளார். இளம் நடிகையின் கோபத்துக்கு ஆளானார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யஷ், பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக இவர் நடித்த கே.ஜி.எப்., திரைப்படம், சர்வதேச அளவில் வெற்றி பெற்றது.
இவரது தாய் புஷ்பா அருண்குமார், சொந்தமாக பட தயாரிப்பு கம்பெனி துவங்கியுள்ளார். இதன் மூலமாக, கொத்தலவாடி என்ற படத்தை தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்து, திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.
அவர் அவ்வப்போது ஊடகத்தினர் சந்திப்பு நடத்தி, படத்தை பற்றி விவரிக்கிறார். சில நாட்களுக்கு முன், புஷ்பா அருண்குமார் அளித்த பேட்டியில், 'உங்களின் தங்கை மகளான நடிகை தீபிகா தாசுக்கு, நீங்கள் எடுக்கும் அடுத்த படங்களில் வாய்ப்பு அளிப்பீர்களா?' என ஊடகத்தினர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு கோபத்துடன் பதிலளித்த புஷ்பா, 'எங்களுக்கும், தீபிகா தாசுக்கும் ஒத்துப்போகாது.
எங்கள் படத்துக்கு தேர்வு செய்ய, அவர் என்ன பெரிய ஹீரோயினா? அவர் என்ன சாதனை செய்துவிட்டார்? அவரை நாங்கள் விலக்கி வைத்துள்ளோம். அவரை பற்றி ஏன் கேட்கிறீர்கள்? என் மகன் என்னை திட்டுவார். எங்களுக்கு வேறு ஹீரோயின் கிடைக்கமாட்டாரா?' என்றார்.
இதை அறிந்த நடிகை தீபிகா, தன் இன்ஸ்டாகிராமில், 'என் அம்மாவுக்கோ, பெரியம்மாவுக்கோ என்னை பற்றி பேச, அருகதை இல்லை. புதிய கலைஞர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
நான் யாருடைய பெயரையும் பயன்படுத்தி, திரையுலகுக்கு வரவில்லை. இனியும் பயன்படுத்த மாட்டேன். பெரியம்மாவாக இருந்தாலும், புஷ்பம்மாவாக இருந்தாலும் சரி, இளம் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நான் பெரிய நடிகை இல்லை என்றாலும், எந்த சாதனையும் செய்யவில்லை என்றாலும், என்னை பற்றி தரக்குறைவாக பேச, யாருக்கும் தகுதியில்லை' என பொரிந்து தள்ளினார்.
தீபிகா தாஸ், வளர்ந்து வரும் இளம் நடிகை. கன்னடத்தில் சின்னத்திரை வழியாக, வெள்ளித்திரைக்கு வந்தவர்.
பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது அவர் திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தை கவனித்து வருகிறார். திரைப்படங்களிலும் நடிக்கிறார். இவரை புஷ்பா அரு ண்குமார் சீண்டியுள்ளார்.