/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை
/
கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை
கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை
கடலைக்காய் திருவிழா முகமூடி அணிந்து ரசித்த நடிகை
ADDED : நவ 20, 2025 03:54 AM

பெங்களூரு: பசவனகுடியில் நடக்கும் கடலைக்காய் திருவிழாவை ரகசியமாக சென்று நடிகை ரசிதா ரசித்துள்ளார்.
பெங்களூரின், பசவனகுடியில் கடலைக்காய் திருவிழா நடந்து வருகிறது. வரலாற்று பிரசித்தி பெற்ற திருவிழாவுக்கு, தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர்.
நடிகை ரசிதா ராம், தன் முகத்தை மறைத்துக் கொண்டு, நண்பர்களுடன் நேற்று முன்தினம் கடலைக்காய் திருவிழாவுக்குச் சென்றுள்ளார். கடைகளை சுற்றிப்பார்த்து மகிழ்ந்துள்ளார். பலருடன், 'செல்பி' எடுத்துள்ளார். ஆனால் தன்னை நடிகை என்று அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
தன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
நான் நடிக்கும், ' கிரிமினல் ' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியை முடித்து, பசவனகுடியின் கடலைக்காய் திருவிழாவுக்கு சென்றிருந்தேன்.
நண்பர்களும் என்னுடன் வந்திருந்தனர். 18 ஆண்டுகளுக்கு பின், நான் கடலைக்காய் திருவிழாவுக்கு சென்றேன்.
திருவிழாவை சுற்றிப் பார்த்து மகிழ்ந்தோம். நான் முகமூடி அணிந்திருந்ததால் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

