/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் கூடுதலாக ரூ.1,034 கோடி இழப்பீடு
/
மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் கூடுதலாக ரூ.1,034 கோடி இழப்பீடு
மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் கூடுதலாக ரூ.1,034 கோடி இழப்பீடு
மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்கள் கூடுதலாக ரூ.1,034 கோடி இழப்பீடு
ADDED : நவ 28, 2025 05:46 AM

பெங்களூரு: ''மழையால் விளைச்சலை இழந்த 14.24 லட்சம் விவசாயிகளுக்கு, கூடுதலாக 1,033.60 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மழையால் விளைச்சல் நஷ்டம் அடைந்த 14.24 லட்சம் விவசாயிகளுக்கு, நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் கூடுதலாக 1,033.60 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை, நேற்று பெங்களூரு விதான் சவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் 'பட்டனை' அழுத்தி முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, கூடுதல் நிதி வழங்கும் நோக்கில் இழப்பீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மழையால் அதிகபட்சமாக 2 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டிருந்தால் 8,500 ரூபாயில் இருந்து 17,000 ரூபாயாகவும்; பாசன பயிர்களுக்கு 2 ஏக்கருக்கு 17,000 ரூபாயில் இருந்து 25,500 ரூபாயாவும்; பல ஆண்டுகளாக வளரும் பயிர்களுக்கு 22,500 ரூபாயில் இருந்து 31,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
மாநில தேசிய பேரிடர் நிதி விதியின்படி, 14.24 லட்சம் விவசாயிகளுக்கு, 1,218.03 கோடி ரூபாய்; கூடுதலாக, மாநில நிதியில் இருந்து 1,033.60 கோடி ரூபாய் என மொத்தம் 2,251.63 கோடி ரூபாய், விவசாயிகளின் வங்கி கணக்கில், நேரடியாக டிபாசிட் செய்யப்படும்.
கர்நாடகாவில் 2.04 கோடி ஏக்கரில் பயிர்கள் விதைக்கப்பட்டன. ஆனால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்த கனமழையால், 36.02 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம் அடைந்ததாகவும், 10,748 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஒன்பது மாவட்டங்களில் பயிர் சேதங்கள் பதிவாகி உள்ளன. தார்வாட், கதக், ஹாவேரி மாவட்டங்களில் அறுவடை கட்டத்தில் இருந்த பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.
கிருஷ்ணா, பீமா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கலபுரகி, யாத்கிர், பீதர் மாவட்டங்களில் பருத்தி, நெல் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. பயிர் சேதத்தின் அளவை துல்லியமாக கண்டறியவும், சேதத்தை மதிப்பிடவும் கூட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.

