/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்யாண கர்நாடகாவில் கூடுதல் கே.பி.எஸ்., பள்ளிகள்
/
கல்யாண கர்நாடகாவில் கூடுதல் கே.பி.எஸ்., பள்ளிகள்
கல்யாண கர்நாடகாவில் கூடுதல் கே.பி.எஸ்., பள்ளிகள்
கல்யாண கர்நாடகாவில் கூடுதல் கே.பி.எஸ்., பள்ளிகள்
ADDED : ஜன 13, 2026 04:55 AM
பெங்களூரு: மாணவ, மாணவியருக்கு வசதியாக, கல்யாண கர்நாடகாவின், 41 சட்டசபை தொகுதிகளில், தலா மூன்று முதல் நான்கு வீதம் கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கல்வியில் மேம்பாடு ஏற்பட்டால், சமுதாயத்திலும் முன்னேற்றம் ஏற்படுவது எளிது. எனவே, கல்யாண கர்நாடக மேம்பாட்டு ஆணையம், கல்யாண கர்நாடகாவின், 41 சட்டசபை தொகுதிகளிலும், தலா மூன்று முதல் நான்கு வீதம் புதிதாக கே.பி.எஸ்., பள்ளிகள் துவங்க திட்டம் வகுத்துள்ளது.
இதற் காக, 25 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், கல்யாண கர்நா டகா மேம்பாட் டு ஆணையம் சார்பில் 200, கல்வித்துறை சார்பில் 150 கே.பி. எஸ்., பள்ளிகள் திறக்கப்படும். கர்நா டகாவில் ஏற்கனவே 240 கே.பி.எஸ்., பள்ளிகள் உள்ளன. இதில், கல்யாண கர்நாடகா பகுதிகளில் 60 மட்டுமே உள்ளன.
பெலகாவியில் 79, பெங்களூரில் 98, மைசூரில் 70 கே.பி.எஸ்., பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பின், கல்யாண கர்நாடகாவில் 410 கே.பி.எஸ்., பள்ளிகள் இருக்கும்.
இரண்டு கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒன்று வீதம், கே.பி.எஸ்., பள்ளிகள் திறக்கப்படும். இப்பள்ளிகளில் தரமான வகுப்பறைகள், அடிப்படை வசதிகள், லேப் என, அனைத்தும் இருக்கும். ஒரே கூரையின் கீழ், எல்.கே.ஜி., முதல் பி.யு.சி., வரையிலான கல்வி கிடைக்கும் . பயிற்சி பெ ற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். பஸ் வசதி, மைதானம், உடற்பயிற்சி ஆசிரியர்களும் இருப்பர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

