தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள்

மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள்


ADDED : மே 09, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் வர்த்தக மையங்கள், பஸ் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

போலீஸ் துறையும் கூட பிரதான சாலைகள், சிக்னல்கள், வர்த்தக வளாகங்கள் என, அனைத்து இடங்களிலும், இத்தகைய கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

இதற்கிடையே மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணியரின் பாதுகாப்புக்காக ஏ.ஐ., கேமராக்கள் பொருத்த, மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக பையப்பனஹள்ளி - எம்.ஜி., சாலை இடையிலான, ஊதா மெட்ரோ பாதையின் ஆறு நிலையங்களில் பொருத்தியுள்ளன.

இது தொடர்பாக, பெங்களூரு மெட்ரோ நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரு மெட்ரோ நிறுவனம், பயணியரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது; பாதுகாப்பை பலப்படுத்துகிறது. இதற்காக ஏ.ஐ., கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது.

முதற்கட்டமாக பையப்பனஹள்ளி - எம்.ஜி., சாலை இடையிலான மெட்ரோ பாதையின், எம்.ஜி., சாலை, டிரினிட்டி, ஹலசூரு, இந்திரா நகர், விவேகானந்தர் சாலை, பையப்பனஹள்ளி மெட்ரோ நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெட்ரோ நிலையத்தின் முன் வரும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை, அடையாளம் காண, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us