/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விமான கண்காட்சி ஏரிகளில் மீன் பிடிக்க தடை
/
விமான கண்காட்சி ஏரிகளில் மீன் பிடிக்க தடை
ADDED : பிப் 08, 2025 06:33 AM
பெங்களூரு: பெங்களூரில் விமான கண்காட்சி நடப்பதால், நகரின் 21 ஏரிகளில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கர்நாடக மீன் வளத்துறை வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின் எலஹங்கா விமான பயிற்சி நிலையத்தில், பிப்ரவரி 10 முதல், 14ம் தேதி வரை, விமான கண்காட்சி நடக்கிறது. தினமும் காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை விமான சாகச காட்சிகள் நடக்கும்.
பிப்ரவரி 13 மற்றும் 14ம் தேதிகளில், விமானங்களின் சாகசங்களை காண, பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
விமான கண்காட்சி நடப்பதால், பெங்களூரின் பிப்ரவரி 17 வரை, எலஹங்கா சுற்றுப்பகுதிகளில் 21 ஏரிகளில் மின் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. மீன்கள் வெளியே வந்தால், பறவைகள் பறப்பது அதிகரிக்கும். இதனால் விமானங்கள் பறப்பதற்கு, தொந்தரவு ஏற்படும். எனவே மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.