/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹேமாவதி தண்ணீர் பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டம்: விஜயேந்திரா
/
ஹேமாவதி தண்ணீர் பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டம்: விஜயேந்திரா
ஹேமாவதி தண்ணீர் பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டம்: விஜயேந்திரா
ஹேமாவதி தண்ணீர் பிரச்னையில் அனைத்து கட்சி கூட்டம்: விஜயேந்திரா
ADDED : ஜூன் 04, 2025 01:20 AM

துமகூரு : ''ஹேமாவதி அணை தண்ணீரை மாகடி, குனிகல்லுக்கு கொண்டு செல்வதால் ஏற்படும் பிரச்னை குறித்து விவாதிக்க, அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும்,'' என்று அரசுக்கு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கோரிக்கை வைத்து உள்ளார்.
ஹாசன் கொரூர் ஹேமாவதி அணையில் இருந்து கால்வாய் வழியாக, துமகூரு மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் துமகூரின் குப்பி பங்காபுரா கிராமத்தில் இருந்து, துமகூரின் குனிகல், பெங்களூரு தெற்கின் மாகடிக்கு தண்ணீரை திருப்பி விடும் திட்ட பணிகள் நடக்கின்றன.
இதற்கு துமகூரு மாவட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தின் போது, சாலையில் டயர்களை எரித்தனர்.
பணிக்காக தோண்டப்பட்ட குழிக்குள் குழாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் தள்ளி சேதப்படுத்தினர். இதுதொடர்பாக மூன்று எம்.எல்.ஏ.,க்கள் உட்பட சிலர் மீது 11 பிரிவுகளில் வழக்குப் பதிவானது.
இந்நிலையில், பங்காபுரா கிராமத்தில் பணிகள் நடக்கும் இடத்தில், பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, எம்.எல்.சி., ரவி நேற்று ஆய்வு செய்தனர்.
பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:
ஹேமாவதி தண்ணீர் விஷயத்தில் துமகூரு மக்களுக்கு அநீதி இழைக்கப்பட கூடாது. இந்த தண்ணீர் துமகூரு மக்களின் உரிமை. மக்கள், விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத குற்றம். அரசியல் செய்ய, நான் இங்கு வரவில்லை. விவசாயிகளை மிரட்டி வழக்குப்பதிவு செய்யாதீர்கள்.
மாகடி, குனிகல்லுக்கு தண்ணீர் கொண்டும் பணியை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறுகிறார். இந்த திட்டம் அறிவியல்பூர்வமாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஆணவத்தால் முடிவு எடுக்காதீர்கள்.
விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினால், அரசு ஆட்டம் கண்டுவிடும். பிரச்னை குறித்து விவாதிக்க அரசு உடனடியாக, அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.