ஞாயிறு விடுமுறை என்றாலும் ராஜ்யோத்சவா தினம் கட்டாயம்
ஞாயிறு விடுமுறை என்றாலும் ராஜ்யோத்சவா தினம் கட்டாயம்
UPDATED : அக் 20, 2026 12:00 AM
ADDED : அக் 19, 2026 07:04 PM
பெங்களூரு: ‘இம்முறை நவம்பர் 1ம் தேதி, ஞாயிறு விடுமுறை நாளன்று வந்தாலும், கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடுவது கட்டாயம்’ என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவு:
ஆண்டு தோறும் நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்படுகிறது. கன்னட மொழி, கலாசாரம், பாரம்பரியத்தை கவுரவிக்கும் வகையில், அர்த்தமுடையதாக இந்நாளை கொண்டாட வேண்டும். இம்முறை நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. விடுமுறை நாளாக இருந்தாலும், ராஜ்யோத்சவா கொண்டாடுவது கட்டாயம்.
தேசிய பண்டிகைகள், முக்கியமான ஜெயந்திகள் மற்றும் கன்னட ராஜ்யோத்சவாவை நிர்ணயித்த நாளன்றே கொண்டாட வேண்டும். மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்.
கன்னட ராஜ்யோத்சவா என்பது, வெறும் கொண்டாட்டமாக இருக்க கூடாது. கன்னட மொழி, மண், கலாசாரத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் முக்கியமான நாளாகும். எனவே விடுமுறையாக இருந்தாலும், கன்னட ராஜ்யோத்சவா கொண்டாடுவதை தவிர்க்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
