ADDED : ஆக 29, 2026 11:18 PM
பெங்களூரு: தங்கும் விடுதியில் நுழைந்து, பெண்களின் உள்ளாடைகளை திருடிய, ஆந்திராவை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பி.ஜி., எனும் தங்கும் விடுதியின் முதல் தளத்தில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்க்கும் வட மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் தங்கியிருந்தார்.
இந்த பி.ஜி.,யின் இரண்டாவது தளத்தில், ஆண்கள் தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், அப்பெண்ணின் உள்ளாடைகள், சில நாட்களாக காணாமல் போயின. கடந்த 24ம் தேதி, அவர் தனது அறையை பூட்டாமல் வெளியே சென்றார். அறைக்கு திரும்பியபோது வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கலைந்து கிடந்ததை பார்த்து சந்தேகமடைந்தார்.
இது குறித்து, கோரமங்களா போலீசில் புகார் அளித்தார். பி.ஜி.,யில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அதே பி.ஜி.,யில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிரிராஜ், 35, என்பவர் உள்ளாடைகளை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தகிரிராஜை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
