தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அங்கன்வாடியில் குழந்தைகளை சிறை வைத்த உதவியாளர்

அங்கன்வாடியில் குழந்தைகளை சிறை வைத்த உதவியாளர்

அங்கன்வாடியில் குழந்தைகளை சிறை வைத்த உதவியாளர்


ADDED : ஆக 02, 2025 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2025 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாத்கிர்: அங்கன்வாடி மையத்தில் சிறார்களை வைத்து, பூட்டிவிட்டு, உதவியாளர் தோட்ட வேலைக்குச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.

யாத்கிர் மாவட்டம், குருமிட்கல் தாலுகாவின், புதுார் கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. நேற்று முன் தினம் மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்க, அங்கன்வாடி மையத்தின் தலைமை ஊழியர், வேறு கிராமத்துக்கு சென்றிருந்தார். அங்கன்வாடி மையத்தில் சிறார்களை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, உதவியாளர் சாவித்ரம்மாவிடம் கொடுத்திருந்தார்.

ஆனால் சாவித்ரம்மா, சிறார்களை அங்கன்வாடி மையத்தில் வைத்து, கதவை வெளியே பூட்டிக் கொண்டு தோட்ட வேலைக்கு சென்றுவிட்டார். உள்ளே இருந்த குழந்தைகள் பயத்தாலும், பசியாலும் அழத் துவங்கின. நீண்ட நேரமாக குழந்தைகள் அழுததால், அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்தபோது, அங்கன்வாடி மையத்தின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

உடனடியாக தலைமை ஊழியருக்கு போன் செய்து, தகவல் கூறினர். அவரும் அங்கு வந்து கதவை திறந்தார். சிறார்களை உள்ளே வைத்து பூட்டி, பொறுப்பின்றி நடந்து கொண்டதை, கிராமத்தினர் கண்டித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us