sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பறவைகள் கூடும் அங்கசமுத்ரா சரணாலயம்

/

 பறவைகள் கூடும் அங்கசமுத்ரா சரணாலயம்

 பறவைகள் கூடும் அங்கசமுத்ரா சரணாலயம்

 பறவைகள் கூடும் அங்கசமுத்ரா சரணாலயம்


ADDED : பிப் 26, 2026 06:32 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயநகரா மாவட்டம், ஹகரிபொம்மனஹள்ளி தாலுகாவின் ஹொஸ்பேட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது அங்கசமுத்ரா கிராமம்.

இக்கிராமத்தின் கிழக்கு திசையில், விஜயநகர பேரரசு காலத்தில், 244 ஏக்கரில் பரந்த ஏரி அமைந்து உள்ளது. இப்பகுதியின் பிரபலமான பறவைகள் சரணாலயமாக விளங்குகிறது.

முன்னர் மழையை நம்பி ஏரி இருந்தது. இப்போது துங்கபத்ரா நதியில் இருந்து தண்ணீர் நிரப்பப்படுகிறது. 244 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், கரிஜாலி போன்ற மரங்கள், தாவரங்கள், புதர்கள் உள்ளன. இவை பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக அமைந்துள்ளது.

- நமது நிருபர் -:

குளிர்காலம் துவங்கியதும், உலகின் பல பகுதிகளில் இருந்தும் பல வகையான பறவைகள் இங்கு வந்து, கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஏரியில் உள்ள மீன்களை தவிர, துங்கபத்ரா நதியில் உள்ள மீன்கள், பூச்சிகள் அவற்றின் உணவாக உள்ளன.

கல்யாண கர்நாடகா பகுதியில் உள்ள அரிய பறவை சரணாலயமாக உள்ளது. உலகளவில் அழிந்து வரும் பல பறவைகள் இனப்பெருக்கம் செய்ய இங்கு வருவதால், 2017ல் அரசால், 'பறவைகள் பாதுகாப்பு காப்பகமாக' அறிவிக்கப்பட்டது.

இங்கு கொக்குகள், சிறிய கொக்குகள், விசில் வாத்துகள், நீர் காகம், ஹெஜ்ஜார்லே, சாம்பல் ஹெரான், இந்திய நீர்க்காக்கு, கேட்கோர்மோரெட், கிரேபரான், ஊதா ஹெரான்கள், நைட் ஹெரான், கால்நடை கொக்கு, கருப்பு, வெள்ளை ஐ.பி.எஸ்., பு புல் என 240க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள், இங்கு இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த ஏரியில், ஒன்பது வகையான மீன்கள் உள்ளன.






      Dinamalar
      Follow us