தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கால்நடை தேர்வு முறைகேடு எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு

 கால்நடை தேர்வு முறைகேடு எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு

 கால்நடை தேர்வு முறைகேடு எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு


ADDED : செப் 22, 2026 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 01:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கால்நடை முறைகேடு வழக்கை புதிதாக விசாரிக்க, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் தலைமையில் எஸ்.ஐ.டி., அமைக்க, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக கால்நடை துறையில் காலியாக உள்ள, 400 கால்நடை மருத்துவர் பதவிக்கு, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தியது.

இதில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கே.பி.எஸ்.சி., தலைவர் சிவசங்கரப்பா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார், இடைத்தரகர் பசவராஜ் கன்னலே ஆகியோரை, கடந்த 18ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், அனைத்து கர்நாடக மாநில மாணவர் சங்கத்தினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இம்மனு, ஐகோர்ட்டில், நீதிபதி நாகபிரசன்னா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதி கூறியதாவது:

இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட முடியாது. சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமார் தலைமையில் எஸ்.ஐ.டி., குழு அமைக்க வேண்டும். இக்குழுவினர், 100 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஊழலின் ஆணிவேரை கண்டறிந்து, உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும்.

இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒரு வாரத்திற்குள், எஸ்.ஐ.டி.,யிடம், சி.ஐ.டி.,யினர் ஒப்படைக்க வேண்டும். மாநில அரசு, எஸ்.ஐ.டி.,க்கு போலீஸ் நிலைய அந்தஸ்து வழங்க வேண்டும்.

விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த கூடாது. மேலும், 30 நாட்களுக்கு ஒரு முறை, நடந்து வரும் விசாரணை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us