/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குக்கே சுப்ரமண்யா கோவிலில் அண்ணாமலை தரிசனம்
/
குக்கே சுப்ரமண்யா கோவிலில் அண்ணாமலை தரிசனம்
ADDED : ஜூன் 29, 2025 11:14 PM

தட்சிண கன்னடா: தட்சிண கன்னடா மாவட்டம் சுப்பிரமண்யா சுவாமி கோவிலுக்கு, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, தன் மனைவி, குழந்தை உட்பட குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின், ஸ்ரீசம்புத நரசிம்ம மடத்தில் நடந்த ஆசிலேஷா பலி பூஜையில் பங்கேற்றார். பூஜைக்கு பின், மடாதிபதி ஸ்ரீ வித்யபிரசன்ன தீர்த்த சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.
பின், அண்ணாமலை அளித்த பேட்டி:
கடந்த 15 ஆண்டுகளாக, மடாதிபதியை சந்தித்து பேசி வருகிறேன். ஆயில்யம் நட்சத்திரமான இன்று (நேற்று) தமிழகம், கர்நாடகா உட்பட உலக மக்கள் அமைதியான, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
பரசுராமர் உருவாக்கிய இப்பகுதிக்கு, 5,000 ஆண்டுகள் வரலாறு உள்ளது. இங்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியிடம் சரணாகதி அடைந்துள்ளனர். மடாதிபதியிடம் ஆசி பெற்ற பின், என் மனம் அமைதி அடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிலேஷா பலி பூஜை
ஆசிலேஷா பலி பூஜை என்பது குறிப்பிட்ட பலன்களை அளிக்கும் பூஜையாகும்.
குறிப்பாக, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது நன்மை பயக்கும். திருமண தடைகள் நீங்குதல், சவால்களை சமாளித்தல், மன உறுதியும், தெளிவும்; திடீர் அதிர்ஷ்டமும் கிடைக்கும்.