தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2,000 டிரைவர்களுக்கு பணி நியமன உத்தரவு

2,000 டிரைவர்களுக்கு பணி நியமன உத்தரவு

2,000 டிரைவர்களுக்கு பணி நியமன உத்தரவு


ADDED : ஜூன் 17, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் 2,000 ஓட்டுநர் - ஆப்பரேட்டர்களுக்கான பணி நியமன உத்தரவுகளைமாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி வழங்கினார்.

கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை துவங்கியது.

இந்த பணிகள் நிறைவுற்று, 2,000 ஓட்டுநர் - ஆப்பரேட்டர்கள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி., தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 2,000 பேரில் 51 பேருக்கு போக்குவரத்துத் துறை ராமலிங்க ரெட்டி பணி நியமன உத்தரவுகளைவழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:

ஓட்டுநர்கள், ஆப்பரேட்டர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த தேர்வில், யாருடைய தலையீடும் இல்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.

பெண் பயணியர், மாணவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு பிறகு பல தடைகளை போக்குவரத்துக் கழகம் எதிர்கொண்டு வருகிறது. வருவாய் அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

நான்கு போக்குவரத்துக் கழகங்களிலும் 9,000 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில், 7,500 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடந்து முடிந்துவிட்டன. விபத்துகளில் இறந்த ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது. இயற்கையாக மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us