/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வா? அதிகாரிகள் பதில்
/
மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வா? அதிகாரிகள் பதில்
ADDED : ஜன 18, 2026 05:36 AM
பெங்களூரு: 'பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் தற்போதைக்கு உயர்த்தப்படாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கடுமையாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் நாட்டிலேயே விலையுயர்ந்த மெட்ரோ ரயில் சேவை வழங்கும் நகரமாக பெங்களூரு மாறியது. இது, பயணியரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரியில், 5 சதவீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த கணக்குப்படி அடுத்த மாதம் டிக்கெட் கட்டணம் உயரும் என, தகவல்கள் வெளியாகின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவகுமாருக்கு கடிதம் எழுதினார். பெங்களூரு மெட்ரோவில் ஏற்கனவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுவது சரியல்ல என்று கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை. வரும் காலத்தில், டிக்கெட் கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்படாலம். ஆனால், இப்போதைக்கு டிக்கெட் கட்டண உயர்வு எதுவுமில்லை' என்றனர்.

