/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது
/
பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது
ADDED : அக் 11, 2025 05:04 AM

பெங்களூரு: பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் சண்டை நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது குறித்த வீடியோக்கள் வெளியாவதும், போலீசார் நடவடிக்கை எடுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதே போன்ற சம்பவம் மீண்டும் ஒன்று நடந்துள்ளது.
மணி ப்பூர் மாநிலத்தை சேர்ந்த என்பீ என்ற பெண், பெங்களூரில் வசித்து வருகிறார். இவர், 2ம் தேதி தன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கன்னடத்தில் பேசக்கூறி என்பீயை தகாத வார்த்தைகளில் திட்டியது தெரிந்தது. மேலும், தன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஆட்டோ ஓட்டுநர் முயற்சித்ததாக அப்பெண் குற்றஞ்சாட்டியிருந்தா ர்.
இது இணையத்தில் வைரலாகியது. ஆட்டோ ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
பெங்களூரு நகர சமூக ஊடகப்பிரிவு போலீசார், அப்பெண்ணிடம் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றனர். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் பவனை நேற்று கொத்தனுார் போலீஸ் கைது செய்தனர். இதற்கு, அப்பெண் பெங்களூரு நகர போலீசாருக்கு நன்றி தெரிவித்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.