ADDED : ஆக 25, 2026 01:07 AM
பெங்களூரு: பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின் கொடிகேஹள்ளி அருகில், 'ஆத்ரேயா ஆயுர்வேதிக்' கல்லுாரி உள்ளது. இங்கு கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஒரு மாதமாக, இந்த கல்லுாரி மூடப் பட்டுள்ளது.
கல்லுாரி பெயரில் வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது. கடன் பாக்கி செலுத்தப்படாததால், கல்லுாரியை மூடியுள்ளனர். இதனால் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும்; விரைவில் கல்லுாரி திறக்கப்படும் என, கல்லுாரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் எப்போது திறக்கும் என்பதை, தெளிவாக கூறாததால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையே பாக்கி கல்வி கட்டணத்தை செலுத்தும்படி, மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் நெருக்கடி கொடுக்கிறது. பாக்கி கட்டணத்தை செலுத்தாவிட்டால், தினமும் 500 ரூபாய் அபராதம் விதிப்பதாக எச்சரித்துள்ளது.
ஒரு பக்கம் கல்லுாரி மூ டப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் கட்டணம் கேட்டு நிர்வாகம் நெருக்கடி கொடுப்பதால், மாணவர்கள் பரிதவிக்கின்றனர். இந்த பிரச்னையில் தலையிட்டு, சரி செய்யும்படி மாநில அரசிடம், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
