தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மக்களை ஆபாச வார்த்தையால் திட்டிய பல்லாரி காங்., - எம்.பி., துக்காராம்

 மக்களை ஆபாச வார்த்தையால் திட்டிய பல்லாரி காங்., - எம்.பி., துக்காராம்

 மக்களை ஆபாச வார்த்தையால் திட்டிய பல்லாரி காங்., - எம்.பி., துக்காராம்


ADDED : ஜூன் 16, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 16, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஜயநகரா: கோடிக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை பணிகள் தரமாக நடக்கவில்லை என கூறிய பொது மக்களை, காங்கிரஸ் எம்.பி., துக்காராம், ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவின், டனாபுரா கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை - 50ல் புதிதாக மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக 33 கோடி ரூபாய் செலவில் சர்வீஸ் சாலை அமைக்க முடிவானது. இதற்காக இரண்டு மாதங்களுக்கு முன், பல்லாரி காங்கிரஸ் எம்.பி., துக்காராம், அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

சர் வீஸ் சாலை பணிகள் முடிந்து, பத்து நாட்களுக்கு முன் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் இந்த சாலை வழியாக, டிரக் சென்றது. அப்போது, சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. திறந்து பத்து நாட்கள் ஆவதற்குள் சாலையில் பள்ளம் ஏற்பட் டதை பார்த்து, பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலை பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர், தரமாக பணிகளை செய்யவில்லை. சாலை உறுதியாக இருக்க, மண் போட்டிருக்க வேண்டும். ஆனால் சாம்பலை பயன்படுத்தி, சாலை அமைத்துள்ளார். இதன் விளைவாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இத்தகவலை அறிந்த எம்.பி., துக்காராம், சாலையை பார்வையிட நேற்று காலை அங்கு சென்றார். அப்போது டனாபுரா கிராமத்தினர், எம்.பி., துக்காராமை வழிமறித்து, '33 கோடி ரூபாய் செலவிட்டு, இதுபோன்ற தரமற்ற சாலையை அமைத்துள்ளீர்கள். இதற்கு யார் பொறுப்பு. ஒப்பந்ததாரர் தரமில்லாமல் பணிகளை செய்து உள்ளார்' என கேள்வி எழுப்பினர்.

இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான துக்காராம், பொது மக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினார். இதை, சில இளைஞர்கள், தங்களின் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். பலரும் துக்காராமை கண்டித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us