தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கோலார் மாவட்டத்தில் 'பந்த்' ஜனபரா வேதிகே அழைப்பு

கோலார் மாவட்டத்தில் 'பந்த்' ஜனபரா வேதிகே அழைப்பு

கோலார் மாவட்டத்தில் 'பந்த்' ஜனபரா வேதிகே அழைப்பு


ADDED : அக் 16, 2025 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2025 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசப்பட்டதை கண்டித்து நாளை 17ம் தேதி கோலார் மாவட்ட 'பந்த்'திற்கு கோலார் மாவட்ட ஜனபரா வேதிகே என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கோலார் மாவட்ட தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையோர், விவசாயிகள், தொழிலாளர்கள், கன்னட அமைப்பினர், மகளிர் சங்கங்கள் இணைந்த கோலார் மாவட்ட ஜனபரா வேதிகே என்ற அமைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதை கண்டித்து நாளை 17ம் தேதி காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை 'பந்த்' நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ராபர்ட் சன் பேட்டை எம்.ஜி.மார்க்கெட், பஸ் நிலையம், ஆண்டர்சன் பேட்டை ஆகிய இடங்களில் இதற்கான துண்டுப் பிரசுரங்களை அந்த அமைப்பினர் விநியோகம் செய்தனர். இந்த 'பந்த்'தில் சுயமாக பங்கேற்கும்படி அனைத்துத் தரப்பினரையும் அந்த அமைப்பினர் கோரியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us