தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/டிச., 4 முதல் 13 வரை பெங்களூரு திருவிழா

டிச., 4 முதல் 13 வரை பெங்களூரு திருவிழா

டிச., 4 முதல் 13 வரை பெங்களூரு திருவிழா


UPDATED : நவ 24, 2026 12:00 AM

ADDED : நவ 23, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 12:00 AM ADDED : நவ 23, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்., ந கர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரு திருவிழா டிச., 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை, மொத்தம் 10 நாட்கள் நகரம் முழுதும் பல இடங்களில் நடக்க உள்ளது. உணவு, இசை, இலக்கியம், உணவுகளுக்காக தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதில், குடியிருப்பாளர் சங்கங்கள், கலாசார அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், கலைஞர்கள் பங்கேற்க வேண்டும்.

துவக்க விழா



டிச., 4ம் தேதி எம்.ஜி., சாலை – பிரிகேட் சாலையில் துவக்க விழா பிரம்மாண்டமாக துவங்கும். இதில், கர்நாடகாவின் பல பகுதிகளை சேர்ந்த 500 நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலமாக செல்வர். முதல்வர் சிவகுமார், மாலை 4:00 மணிக்கு நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைப்பார்.

இதை தொடர்ந்து, சுதந்திர பூங்காவில் டிச., 5, 6 ஆகிய தேதிகளில், கலாசார நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான கண்காட்சி, உணவு திருவிழா; டிச., 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை, புத்தக கண்காட்சி நடக்கும். கெம்பேகவுடா உருவாக்கிய பெங்களூரு குறித்த சிறப்பு கண்காட்சி நடக்க உள்ளது.

ரவீந்திர கலாஷேத்ரா, பெங்களூரு சர்வதேச மையம், தேசிய நவீன கலைக்கூ டம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிறுவனங்களின் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடக்கும். கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்கள், மெட்ரோ நிலையங்கள், பூங்காக்கள் விழா கோலம் பெறும். பெங்களூரின் பிரபலமான உணவுகள் உணவு திருவிழா வில் கிடைக்கும்.

நிறைவு விழா



பெங்களூரு திருவிழாவின் நிறைவு, மானக் ஷா பரேடு மைதானத்தில் டிச., 13ம் தேதி நடக்கும். இதில், பிரபல பாடகர்களான சஞ்சித் ஹெக்டே, சுனிதி சவுஹான் ஆகியோர் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

இவ்விழாவிற்கு 20 கோடி ரூபாய் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ஜி.பி.ஏ., சார்பில் 50 நிகழ்ச் சிகளும், தனியார் நிறுவனங்கள், கலாசார அமைப்பினர் சார்பில் 150க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் ந டத்தப்படும்.

இந்த விழா குறித்து மேலதிக தகவல்களை ‘www.bengalurujatre.in’ என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us