ஷிவமொக்கா எம்.பி.,யுடன் இலங்கை குழுவினர் சந்திப்பு
ஷிவமொக்கா எம்.பி.,யுடன் இலங்கை குழுவினர் சந்திப்பு
ADDED : ஜூலை 04, 2026 11:28 PM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவின் இல்லத்துக்கு, இலங்கை எம்.பி., சிவஞானம் ஸ்ரீதரன் வருகை தந்தார்.
இலங்கை எம்.பி., சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர், கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஷிவமொக்கா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திராவின் இல்லத்துக்கு நேற்று வருகை தந்தனர். தன் இல்லத்துக்கு வருகை தந்த அவர்களை எம்.பி., ராகவேந்திரா, சம்பிரதாயப்படி வரவேற்பு அளித்து கவுரவித்தார்.
இந்தியா - இலங்கை இடையிலான, நீண்ட கால நல்லுறவு, இரண்டு நாடுகளின் அரசியல் சூழ்நிலை உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து, தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
மலைப்பகுதி மாவட்டங்களின் விவசாய நடைமுறை, சுற்றுலா, வரலாற்றை பற்றி, இலங்கை குழுவினர் பாராட்டி பேசினர்.
